செய்யுள் 37செய்யுள் 37


கிரிவாய்விடு   விக்ரம   வேல்   இறையோன்
பரிவாரம்   எனும்   பதம்   மேவலையே
புரிவாய்   மனனே   பொறையாம்   அறிவால்
அரிவாய்   அடியோடும்   அகந்தையையே.

    பொழிப்புரை: "ஓ மனமே! கிரௌஞ்ச மலையின் மீது அது பிளக்குமாறு சக்திமிக்க வேலாயுதத்தை எய்திய வேலாயுதப் பெருமானின் பரிவாரம் {அவரை அடைந்தவர்களில் (அ) திருத்தொண்டர்களில் ஒருவன்} எனும் பதவியை அடைவதையே விரும்புவாய்; பொறுமையாகிய ஞானத்தால் அகந்தையை (“நான்” எனும் ஆணவத்தை) வேருடன் வெட்டி வீழ்த்துவாய்."

விளக்கவுரை

    ஆழமான மற்றும் மர்மமான உட்கருத்துக்கள் பல இச்செய்யுளில் பொதிந்திருப்பதால், இதைச் சரியாக அறிவதென்பது மிகவும் கடினம், ஆனால் மிகவும் அவசியம். அருட்செல்வர் அருணகிரியார் இங்கு பயன்படுத்திய வார்த்தைகள் உள்ளுணர்வு சார்ந்தவை, தத்துவார்த்த ஆழமும் இரகசிய உட்பொருளும் கொண்டவை. வெறும் அகராதியின் உதவிகொண்டு இச்செய்யுளைச் சரியாக புரிந்துகொள்ள இயலாது. இச்செய்யுளில் சொல்லப்படும் உண்மையான கருத்தை புரிந்துகொள்ள, வார்த்தைகளுக்கு மேற்போக்கான அர்த்தம் கொள்வது எவ்விதத்திலும் உதவாது. இது ஒரு அற்புதமான செய்யுள், இதில் அவர் பலவித அரிய கருத்துக்களை ஒரு திறமையான முறையில் பொதித்துத் தந்துள்ளார்.

    ஆத்மானுபூதியைப் பெறுவதில் உண்மையான, தீவிர ஆர்வம் கொண்டு, அச்சாதகன் தனது குருவை அணுகி சன்னியாச தீட்சையை தனக்களித்திட வேண்டினான் (செய்யுள்-36). தகுதி மற்றும் தயார்நிலையில் அவன் இருப்பதை உணர்ந்த குரு, அவன்மேல் கருணைகொண்டு, அவனுக்கு சன்னியாச-தீக்ஷை கொடுக்கிறார். அதன் துவக்க நிகழ்ச்சியாக, விராஜ-ஹோமம் (அக்னி வேள்வி) என்றழைக்கப்படும் சடங்கு செய்யப்படுகிறது. இந்த சடங்கில், அவனுடைய தனிமனிதத் தன்மைக்கு காரணிகளான உடல், செயற்-புலன்கள் (ஐந்து கர்மேந்திரியங்கள்), அறிவுப் புலன்கள் (ஐந்து ஞானேந்திரியங்கள்), (ஐந்து) பிராணன்கள், மனம், அகங்காரம் போன்ற அனைத்து உறுப்புக்களும், தனித்தனியான மந்திரங்கள் மூலமாக, அவனால் ஒன்றன்பின் ஒன்றாக தீயில் அர்ப்பணம் செய்யப்படுகின்றன. “இனிமேல், நீ உடல், மனம் ஆகிய இவை எதுவும் இல்லை; உண்மையில் நீ ஆத்மா (அ) பிரம்மம் (அ) தூய்மையான விழிப்புணர்வு (அ) சைதன்யம் மட்டுமே” என்று குரு அவனுக்கு அறிவுறுத்துகிறார். பின்னர், குரு அவனுக்கு ‘மகாவாக்கிய’ உபதேசம் தந்து, அதன் மூலம் நிர்குண தியானம் செய்யும் வழிமுறையைத் துவக்கி வைக்கிறார். அவர் "தத் த்வம் அஸி" ---- " நீ அது (பிரம்மம்)” என்ற ‘மகாவாக்கிய’ மந்திரத்தை அவனுக்கு உபதேசிக்க, சீடனான அவன் அஹம் பிரம்ம அஸ்மி---- 'நான் பிரம்மம்” என்று பதிலுக்கு உரைப்பான். இப்படியாக ஒன்பது முறை செய்யப்படும். பிரம்ம-நிஷ்ட (பிரம்மனில் நிலைபெற்றிருக்கும்) குருவானவர் "தத் த்வம் அஸி" ---- " நீ அது (பிரம்மம்)” என்று சொல்லும்போது அத்துடன் தனது ஆத்ம-சக்தியை சீடனுக்குப் பாயச்செய்கிறார். அந்த சக்தியால், சீடன் அஹம் பிரம்ம அஸ்மி---- “நான் பிரம்மம்” என்று சொல்லும்போது, அவன் ‘பிரம்மம்’ என்பதைத் தன் இதயத்தில் ஒருசிறிது “உணர”முடிகிறது. இந்த மகாவாக்கியத்தை விடாமல் தியானம் செய்து, “நான் பிரம்மம்“ என்ற அனுபவத்தில் அவன் நிலைபெற வேண்டும். இதுவே அவனது தினசரி தியானத்திற்கான மந்திரம் (அ) சூத்திரம். இந்த ‘அஹம் பிரம்ம அஸ்மி’ --- “நான் பிரம்மம்” என்ற மந்திரத்தையே அருணகிரியார் “(நான்) இறையோன்” என்கிறார்.

    “(நான்) இறையோன் பரிவாரம்”: -- பரிவாரம் என்றால்அவரைச் சேர்ந்தவர்கள்எனலாம். இறையோன் என்றால்இறைவன்ஆகும். “(நான்) இறையோன் பரிவாரம்என்றால்நான் இறைவனைச் சேர்ந்தவன்என்று பொருள், அதாவது, நான் இவ்வுலகை, இந்த பிரபஞ்சத்தை, பிரகிருதியைச் சேர்ந்தவன் அல்ல. இவ்வுடல், புலன்கள், ஆகிய அனைத்தும்பொருள்வகையைச் சார்ந்தவை, அதாவது பிரகிருதியைச் சார்ந்தவை, அவையனைத்தும் விராஜ வேள்வியில் அர்ப்பணிக்கப்பட்டுவிட்டன. ஆனால், “உண்மை நான்” () ஜீவாத்மா () தியானிக்கும்-உணர்வு என்பது ஒரு (உயிர்-உணர்வற்ற) ஜடப்பொருளல்ல; அது சைதன்யம் () உயிருள்ள வஸ்து; இறைவனுடன் ஒருங்கிணைந்து இருக்கிறது, அது எல்லையில்லா பேருணர்வு எனப்படும் பிரம்மத்தின் அம்சம். ஆகையால், “(நான்) இறையோன் பரிவாரம்என்றால், நான் இறைவனைச் சேர்ந்தவன், நான் இறைவனின் ஒரு பகுதி/ அங்கம், நான் இறைவன். இப்படியாக, நான் இறைவன்”, ‘நான் பிரம்மம்’, என்று தியானிக்க வேண்டும். இது எப்படிப்பட்டது என்றால், அலைநான் கடலைச் சார்ந்தவன்,’ ‘நான் கடலின் ஓர் அங்கம்,’ ‘நான் கடலின் ஒரு பகுதி, ‘நான் கடல்.” என்று சொல்வது போன்றது. எப்போது அலை தனது பெயர், வடிவம், மற்றும் இயக்கம் ஆகிய ‘அலைத்தன்மையை’ துறக்கின்றதோ, அப்போதே அது தன் சுயத்தன்மையாகிய கடல்-நீர் ஆகி, கடலோடு ஒருங்கிணந்து விடுகிறது. பின்னர், அது, ‘நான் அலை’ என்று உணர்வதற்கு பதிலாக ‘நான் கடல்’ என்று உணர்கிறது. அவ்வாறாக அது உணர்வதே சரியானது ஆகும்.

    “இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய்”: --- இதை இன்னொரு கோணத்தில் நாம் பார்க்கலாம். இங்குஇறையோன் பரிவாரம்என்ற பதத்தை (நிலையை) அடைய ஆசைப்பட வலியுறுத்தப்படுகிறது, அதாவது, இறை-பக்தர்களின்/ யோகிகளின்/ ஞானிகளின் சங்கத்தில் ஒருவனாக ஆக வலியுறுத்துகிறது.. ஆனால், உண்மையில், யார் இறை-பக்தன்/ யோகி/ ஞானி? தன்னைத்தானே அவ்வாறு சொல்லிக் கொள்கிறவர்களோ, அல்லது மற்றவர்களால் அவ்வாறு அழைக்கப்படுபவர்களோ அல்ல; இறைவனே எவரெவரை “இவன் என் பரிவாரம்” (அ) “இவன் என்னைச் சார்ந்தவன்” என்று கருதுகிறாரோ அவர்கள் மட்டுமே அவர் பரிவாரம் ஆவர். அவர்கள் யார்? அவர்கள்தான் இறை—மனிதர்கள், இறைவனை அடைந்தவர்கள், இறைவனை உணர்ந்தவர்கள், “நான் பிரம்மம்” என்ற இறை-உணர்வில் எந்நேரமும் திளைப்பவர்கள். அவர்கள் இவ்வுடலுடன் வாழும்பொழுதுஜீவன் முக்தர்கள்என்றும், இவ்வுடலைத் துறந்த பின்னர்விதேக முக்தர்கள்என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்களே துறவிகள்; அவர்களே ஞானிகள்; அவர்களே அருளாளர்கள்; அவர்களே தொண்டர்கள்; அவர்களேஇறைவனின் உண்மையான பக்தர்கள்’; அவர்களேஇறையோன் பரிவாரம்’; அவர்களேஅஹம் பிரம்ம அஸ்மி’ (நான் பிரம்மம்) என்ற உணர்வில் நிரந்தரமாக திளைப்பவர்கள். அவர்களுக்கும், இறைவனுக்கும் யாதொரு பேதமும் (வித்தியாசமும்) இல்லை. அதனால், அவர்கள் தெய்வ-மனிதர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பக்த-அருளாளர்களாக (திருத்தொண்டர்/அருட்தொண்டர்/நாயன்மார்/ஆழ்வார்) இருக்கலாம், யோகி-அருளாளராக இருக்கலாம், ஞானி-அருளாளராக இருக்கலாம். அவர்களே உண்மையான “இறையோன் பரிவாரம்.” அவர்கள் மூலம் இறைவன் உலகத்திற்கு அருளுதவி செய்கிறார்.

    அத்தகைய உண்மையான இறை-பக்தர்களுக்கு, இறைவன் மட்டுமே உண்மை; இறைவன் மட்டுமே அனைத்தும், இறைவனைத்தவிர வேறொன்றுமில்லை. இறைவன்பால் அவர்களுக்கு இருக்கும் பூரண விசுவாசம் நம் புரிதலுக்கு அப்பாற்பட்டது --- அந்த விசுவாசத்தினால், அவர்கள் இறைவனிடம் தங்களைப் பூரணமாக அர்ப்பணித்து விடுகிறார்கள். அதனால், இறைவன் அவர்களுக்காக எதையும் செய்யவேண்டி இருக்கிறது; அவர்களுடைய பூரண விசுவாசம் இறைவனை அவர்களுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்யச் செய்கிறது; அவர்களுக்கு எப்பொழுதெல்லாம் தேவையோ அப்பொழுதெல்லாம் வந்து அவர்களின் இடர்ப்பாடுகளை, சிரமங்களை களையச் செய்கிறது. அதுமட்டுமன்றி, அவர்களைத் துன்புறுத்தும் நன்றியற்ற இவ்வுலக மக்களுக்கு, அத்தொண்டர்களின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுவதற்காக, அடிக்கடி இறைவனை காட்சி அளிக்கவைக்கிறது.

    இத்தகைய இறை-பக்தர்களான அருட்செல்வர்களின் சரித்திரத்தை --- அதிலும் விசேஷமாக தென் இந்தியாவில் வாழ்ந்த அறுபத்தி மூன்று நாயன்மார்கள் மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் ஆகியவர்களின் சரித்திரத்தை --- படித்தால் (அ) கேட்டால், அவர்களின் மகத்துவம், சக்தி, தெய்வத் தொண்டுகள் ஆகியவைகளை நாம் நன்கு அறிந்து கொள்ளலாம். கௌரங்க (சைதன்ய) மகாபிரபு, துளசி தாசர், ராமதாசர், ஞான தேவர், அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர், சங்கரர், ராம கிருஷ்ணர், ரமண மகரிஷி, சுவாமி சிவானந்தர் போன்ற இறை-பக்தர்கள் (அருட்தொண்டர்கள்) தங்களது வெறும் சாநித்தியத்தாலும், அருட் பார்வையாலும் மக்களை முற்றிலும் மாற்றி அமைத்திட முடியும். அவர்களின் தொடர்பு, ஸத் சங்கம் நம்மை முழுதும் சுத்தப்படுத்தி, நமக்கு ஊக்கமளித்து, நம்மில் அரும்பெரும் மாற்றங்களை செய்யவல்லது. எனவே, அவர்களுடன் இணங்கியிருக்கும் நேரடித் தொடர்பால், ஒருவனுக்கு இறைவன் தரிசனம் கிடைப்பது எளிதாகிறது, திண்ணமாகிறது. எப்படி சித்துமணிக்கல் இரும்பைப் பொன்னாக மாற்றிவிடுகிறதோ, அப்படி இவர்கள் மக்களை இறையடியார்களாக மாற்றுகிறார்கள். அவர்கள் உண்மையில் இறைவனைச் சேர்ந்தவர்கள்; அதனால், அவர்களே “இறையோன் பரிவாரம்”. “இத்தகைய அருளாளர்களாகிய ‘இறையோன் பரிவாரத்தை’ச் சேர்ந்தவன் என்ற பதத்தை அடைவதற்கு ஆசைப்படுவாயாக” என்பதே இச்செய்யுளின் அறிவுரை. இத்தகைய இறையோன் பரிவாரத்தைச்சேர்ந்த பக்தர்கள், இறை-தொண்டு செய்வதை மட்டுமே தங்கள் ஒரே பணியாகக்கொண்டும், இறைவனை பூஜித்தும், அவர் மகிமைகளைப் பாடியும், அவர் நாமத்தை ஜபம் செய்தும், அவரை தியானித்தும், அவரது லீலைகளைப் பற்றி மட்டுமே தங்களுக்குள் பேசியும், போற்றியும் வாழ்ந்து வருகிறார்கள்; சுருங்கக் கூறின், அவர்கள் இறைவனுக்காகவே வாழ்கிறார்கள், இறைவனிலேயே வாழ்கிறார்கள். மேலும் அவர்களுக்கு இறைவனைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை. இறை-அனுபூதி அடைந்த தொண்டர்கள், பக்தர்கள், யோகிகள், ஞானிகள், ஜீவன் முக்தர்கள் ஆகிய இவர்கள் மட்டுமே உண்மையில் “இறைவன் பரிவாரம்” ஆவார்கள். எனவேதான், அறுபத்தி மூன்று நாயன்மார்களின் வாழ்க்கை சரிதத்தை விளம்பும் ‘பெரிய புராணம்’ எனப்படும் தெய்வீகத் தமிழ் படைப்பு, ‘திருத்தொண்டர் புராணம்’ எனப் போற்றி அழைக்கப்படுகிறது.

    ‘இறை-பக்தர்கள்’ ஒரு தனிச் சிறப்பான கூட்டத்தைச் சார்ந்தவர்கள். அவர்கள் ‘தொண்டர்கள்’ என அழைக்கப்படுகிறார்கள். தொண்டு என்றால் சேவை (தெய்வீக சேவை) ஆகும். எவரொருவர் இறைவன் மற்றும் அவருடைய அன்பர்களின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு விட்டாரோ, அவர் தொண்டர் எனப்படுகிறார். தொண்டர்கள் உண்மையான சேவையில் ஈடுபட்டுள்ளவர்கள். அவர்கள் இறைவனுக்கும் அவர்களது பக்தர்களுக்கும் தங்களை அடியார்களாகக் கருதுவார்கள். அவர்கள் கோவில்களுக்கும், ஆசிரமங்களுக்கும் சேவை செய்வதற்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையின் முழு நேரத்தையும் தேய்வீக சேவையில் செலவிடுகிறார்கள். கோவில்களை சுத்தப்படுத்துதல், (உழவாரப் பணி) அக்கோவிலுக்கு வருபவர்களின் தேவைகளைக் கவனித்தல், கோவிலிலுள்ள பூந்தோட்டம், திருக்குளம், கிணறு முதலியவற்றைப் பராமரித்தல், மற்றும் இறை-வழிபாட்டிற்காக பூமாலைகள் கட்டுதல், சந்தனம் அரைத்துக் கொடுத்தல், இப்படியாக பற்பல இறை-சேவைகளில் ஈடுபடுகிறார்கள். இப்படியாக, எப்பொழுதும் இறைவனைப் பற்றிய சிந்தனையிலேயே வாழும் அவர்கள், எல்லாத் தொண்டுகளையும் தாமாக முன் வந்து செய்கிறார்கள்.. அவர்கள் சம்பளத்திற்காக உழைக்கும் வேலையாட்கள் அல்ல. அவர்கள் சேவை, ஏதோவொரு குறிப்பிட்ட கோவிலுக்கோ அல்லது இடத்திற்கோ மட்டும் கட்டுப்பட்டது அல்ல. அவர்கள் ஒரு கோவிலிலிருந்து மற்றொன்றிற்கும், ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கும் செல்கின்றனர். பொதுவாக, எங்கெல்லாம் அவர்களின் சேவை தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் சென்று தொண்டு செய்கிறார்கள். அவர்கள் மிகவும் எளிய உடைகளை அணிவார்கள். அதனால், கோவில் அதிகாரிகளோ, மக்களோ அவர்களைச் சரியான முறையில் மதிக்கா விட்டாலும், அதைச் சிறிதும் மனதிற்கொள்ளாமல் தொண்டு செய்வதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். தங்களின் அகங்காரம் அகல, அனைத்துவகையான அவமானங்களையும் தாங்கிக் கொள்வார்கள். இப்படியாக இறைவன்பால் தங்கள் முழுஅன்பினையும் பொழிவதன் மூலம் பொறுமையை வளர்த்துத் தங்கள் அகங்காரத்தை நிர்மூலமாக்கி அழித்து விடுகிறார்கள். இதன்மூலம் கந்தப் பெருமானின் கருணையைப் பெறுகிறார்கள். அவர்களின் இறையன்பு, பக்தர்களுக்கு சேவை செய்திடுவதில் அவர்கள் கொண்டுள்ள உண்மையான ஆர்வம் ஆகியவை அவர்களுடைய அந்தராத்மாவுக்கு (இறைவனுக்கு) மட்டும்தான் தெரியும். அவர்களுக்கு இறைவன் மட்டுமே இருக்கிறார், அதுவும் அவரின் பக்தர்கள் வடித்தில். இவர்கள்தான் ‘தொண்டர்கள்’, உண்மை இறை-பக்தர்கள், இறைவனைச் சேந்தவர்கள் --- “இறையோன் பரிவாரம்”.

    அப்படியென்றால், நாம் இறைவனுடைய பக்தர்கள் இல்லையா? நாம் தினந்தோறும் கோவில்களுக்குச் செல்கிறோம், வீட்டில் பிரார்த்தனைகளும் பூஜைகளும் செய்கிறோம், வேதங்களை/ சாஸ்திரங்களைப் படிக்கிறோம், ஸத் சங்கங்களில் பங்கேற்கிறோம், இப்படியே நாம் பக்தி செய்வதைப் பற்றி கூறிக் கொண்டே போகலாம். ஆம், நாமும் இறைவனின் பக்தர்கள்தான்; ஆனால் உண்மையான பக்தர்களல்ல, இரண்டாம்நிலை பக்தர்கள். இறைவனின் உண்மையான பக்தர்கள் இறைவனிலேயே தங்களை நிலைநிறுத்திக் கொண்டு, இறை-சிந்தனையிலேயே தங்கள் மனம் ஈடுபட்டிருக்குமாறு செய்கிறார்கள். வேறு எந்த சிந்தனையும் அவர்கள் மனதில் எழுவதேயில்லை. ஆனால் நம் விஷயத்தில், ஒரு நாளில் சிறிய நேரத்திற்குத்தான் நாம் இறைவனை நினைக்கிறோம்; ஆனால், மற்றநேரத்தில் (கிட்டத்தட்ட முழுநாள் என்றே கொள்ளலாம்) இறைவனை சிந்திக்காமல் இருப்பதோடல்லாமல், காமம், கோபம், பேராசை, வெறுப்பு, பாசாங்குத்தனம் போன்ற தெய்வீகத்துக்குப் புறம்பான எண்ணங்களில், செயல்களில் ஈடுபட்டு வாழ்கிறோம், சிலநேரங்களில் இவைபற்றி நாமே வெட்கப்படுவோம், நாம் இறைவனைவிட உலகத்தோடு அதிகம் சொந்தம் பாராட்டுபவர்கள். உண்மையில் நாம் உலகத்தைச் சேந்தவர்கள்; இறைவனைச் சேந்தவர்கள் அல்ல. ராமகிருஷ்ண பரமஹம்சர் நமது மனதை ஒரு ’-க்கு ஒப்பிடுகிறார் --- ஈ சிறிது நேரம் இனிய பண்டங்களில் உட்கார்ந்து இனிப்பை சுகமாக அநுபவிக்கிறது, அடுத்த கணம் அங்கிருந்து பறந்து சென்று, மலத்தின் மீது உட்கார்ந்து அதையும் சுகமாக அநுபவித்துக்கொண்டே இருக்கிறது. நாம் இந்த வகையான இரண்டாம்நிலை பக்தர்கள். நாம் இத்தகைய இரண்டாம்நிலை பக்தர்கள் குழுவைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் என்ன பயன்? எனவே, “இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய்” என்று இச்செய்யுளில் சொல்லப்படுவது ஒருவன் அந்த முதல்நிலை அல்லது உண்மையான பக்தனாக ஆவதற்கு ஆசைப்படவேண்டும் என்பது; நம்மைப்போல் இரண்டாம்நிலை பக்தனாவதற்கு அல்ல.

    “எனும் பதம் மேவலையே புரிவாய்”: 'எனும் பதம்' என்றால் 'இறையோன் பரிவாரம்' அல்லது 'அஹம் பிரம்ம அஸ்மி' நிலை என்று பொருள். 'மேவலையே புரிவாய்' என்பது, தியானம் செய்து அந்நிலையை அடைவதற்கு தீவிர ஆர்வம் கொள், அதாவது "அஹம் பிரம்ம அஸ்மி" என்ற உணர்வு நிலையில் தன்னை நிலைநிறுத்த ஆர்வம் கொண்டு முயற்சி செய்ய வேண்டும் என்று அர்த்தம். எப்படி? அந்த மகாவாக்கியத்தை தியானிப்பதன் மூலம். ஏனெனில், "அஹம் பிரம்ம அஸ்மி" என்ற தியானம், "அஹம் பிரம்ம அஸ்மி" என்ற மகாவாக்கியத்தின் உண்மையான அனுபவம் (அ) சாக்ஷாத்காரம் அடைவதற்கு வழிவகுக்கும் --- அத்வைத-பாவனையே பின்னர் அத்வைத-அவஸ்தையாகிறது. தீவிர உணர்வு, அனுபவமாகிறது. தியானம், சமாதிக்கு வழிவகுக்கிறது. 'நாம் எப்படி நினைக்கிறோமோ, அப்படியே ஆகி விடுகிறோம்’ – (As you think, so you become). நாம் எவ்விதம் சிந்திக்கிறோமோ, அவ்விதமே ஆகிறது நம் விழிப்புணர்வு --- ஜீவாத்மா அல்லது ஈஸ்வரன், மனிதன் அல்லது இறைவன், தனிப்பட்டவன் அல்லது அண்டம், பந்தப்பட்டவன் அல்லது முக்தன் (விடுவிக்கப்பட்டவன்) என்று எப்படி நினைக்கிறோமோ அப்படியே ஆகிறோம். நமது விழிப்புணர்வு, "நான் உடல்" என்று நினைத்தால், அது உடலோடு மட்டுமே வரையறுக்கப்பட்டுத் தன்னை உடலாகவே காண்கிறது (அனுபவிக்கிறது); ஆனால், அது "நான் தூய உணர்வு அல்லது இறைவன் அல்லது பிரம்மம்" என்று நினைத்தால், அது நிச்சயம் இறைவனாக ஆகிறது, ஏனெனில் அது பிரம்மம். எனவே, “இறையோன் பரிவாரம் எனும் பதம் மேவலையே புரிவாய்” என்று மனது அறிவுறுத்தப்படும் போது, ​​"அஹம் பிரும்ம அஸ்மி", "நான் பிரம்மம்" என்று தியானிப்பதன் மூலம் அந்த பிரம்மனின் நிலையை அடைய விரும்புவாயாக என்ற அறிவுரை கொடுக்கப்படுகிறது. தியானம், உணர்தலாகிறது (அதாவது, ‘நான் பிரம்மம்’ என்ற தியானம், ‘நான் பிரும்மன்’ என்ற அனுபூதியில் முடிகிறது, அதாவது எதை எண்ணினானோ, அதுவாகவே ஆகிறான்; தியானம் சமாதியாகிறது.

    இவ்வாறு ​​"அஹம் பிரும்ம அஸ்மி", "நான் பிரம்மம்" என்று தியானம் செய்வதன் மூலம் என்ன ஆகிறது என்பது, “பொறையாம் அறிவால் அரிவாய் அடியோடும் அகந்தையையே.” -- பொறுமையாகிய ஞானத்தால் அகந்தை (“நான்” எனும் ஆணவம்) வேருடன் அரியப்படும் (களையப்படும்) என்று மேலும் விளக்கப்படுகிறது.

    “பொறையாம் அறிவு”: 'நான் பிரம்மம்' என்று தியானிக்க குரு அவனுக்கு அறிவுரை கூறினார். ஆனால் பிரம்மம் என்றால் என்ன? அல்லது, எப்படி பிரம்மனை தியானிப்பது? அதற்கு குரு வழிகாட்டுகிறார். அது 'பொறையாம் (நிறை) அறிவு', அதாவது, சித்-ஸ்வரூபம், (அ) சைதன்ய-ஸ்வரூபம், அல்லது எல்லையற்ற உணர்வு. உபநிஷதத்தில், பிரம்மம் அல்லது அறுதி உண்மை என்பது 'பிரக்ஞானம் பிரம்ம' --- அதாவது 'உணர்வே பிரம்மம்' --- என்று விளக்கப்படுகிறது. (இந்த 'பிரக்ஞானம் பிரம்ம' என்பது நான்கு மகாவாக்கியங்களில் ஒன்றாகும்.) கந்த புராணத்தில், கந்தப் பெருமானுடைய அவதாரத்தை விவரிக்கும்போது: “பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு, அது ஓர் மேனியாகி” என்று கூறப்படுகிறது. (முழு விவரத்திற்கு காப்புச் செய்யுளைப் பார்க்கவும்). பிரம்மம் என்பது 'சோதிப் பிழம்பு', பூரண-ஜ்யோதி, அகண்டாகார உணர்வு அல்லது அறிவு. அதாவது நிறை-உணர்வு; இது ஒரே சீரான நிறை-உணர்வு, அதாவது, அது பிளவுபடாதது, அது பிரிக்க முடியாதது, அது முடிவற்றது, அது எல்லையற்ற பரம்பொருள் (உணர்வு); அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை, வேறு ஒன்றும் இருக்க முடியாது. அருணகிரியார் இந்த நிறை-உணர்வை “பொறையாம் அறிவு” என்று குறிப்பிடுகிறார். அறிவு என்பது ஞானம் அல்லது உணர்வு (சித் அல்லது பிரக்ஞை) ஆகும். ‘பொறை’ என்பது ‘அடக்கமான’, ‘சமாதானமான’, ‘சாந்தமான’ ஆகும், அதாவது எல்லையற்ற மற்றும் பிரிக்க இயலாத நிறைவான ஒன்று. எனவே, 'பொறையாம் அறிவு' என்பது "நிறை உணர்வு", அல்லது சாந்தமான, அடக்கமான உணர்வு, அதாவது "உணர்வு உணர்வாகவே இருப்பது" (சித்-சொரூபம்), அதாவது 'அசைவற்ற', ‘கிளர்ச்சியற்ற’, ‘சலனமற்ற’, ‘மாறுதலற்ற’ (விளையாடல் அற்ற) ஒன்று என்று பொருள்படும். ஆகவே, 'பொறையாம் அறிவு' என்பதன் அர்த்தம் ‘சமாதானமான அறிவு’ (அ) ‘உணர்வாக இருப்பது’ (சித்-சொரூபம்) ஆகும், அதாவது, அது பிரம்மத்தைக் குறிக்கும். ‘சித்’ என்பது புலன்களுக்கு தெரியும் உலகின் பண்புகளான எல்லை, வரம்பு, மாறுதல், அசைவு, அழிவு, ஆகிய அனைத்திற்கும் முற்றிலும் நேரெதிரானது. புலன்களுக்குத் தெரியும் இவ்வுலகம் உணர்வில் உண்டாகும் சலனம், தோற்றம் (அ) ‘உணர்வு – விளையாடல்’ (சித்-விலாசம்). பிரம்மம் என்பது இருப்பு (சித்-சொரூபம்), இவ்வுலகு என்பது சலனம், விளையாட்டு (சித்-விலாசம்). பிரம்மம் என்பது ‘என்றும் இருப்பது’ (அ) ‘மாறுதலற்றது’ (பூரணமானது), அதேசமயம், இவ்வுலகம் என்பது ‘மாறிக் கொண்டிருப்பது’ (அ) ‘அழியக் கூடியது’. ஆக, “நான் பிரம்மம்” என தியானம் செய்வாயாக என்று அவன் அறிவுறுத்தப்பட்டதன் அர்த்தம், ‘நான் பொறையாம் அறிவு’ என்று தியானிக்க வேண்டுமென்பதே, அதாவது, ‘நான் நிறை-உணர்வு; எல்லையற்றதும், இரண்டற்றதுமான சைதன்யம் அல்லது அறிவு’ என்று தியானம் செய்திட வேண்டும். ‘பொறையாம் அறிவு’, ‘சோதிப் பிழம்பு’, ‘பிரக்ஞானம் பிரும்ம’ (உணர்வே பிரும்மன்) ஆகியவைகளின் அர்த்தம் ஒன்றே.

    “அஹம் பிரம்ம அஸ்மி", “நான் பிரம்மம்”, ‘நான் நிறை-உணர்வு’, ‘நான் சைதன்ய-ஸ்வரூபம்’ என்று, தீக்ஷை பெற்ற, நன்றாக மனப் பக்குவமடைந்த சாதகன் தியானம் செய்யும்போது, அவனுடைய மனம் தனது அகங்கார-உணர்வு (அ) ஜீவ-உணர்வு (அ) தனித்துவ-உணர்வு ஆகியவைகளை இழந்து, தன் ஆதாரமான அதிஷ்டான-சைதன்னியத்தில், சித்-சொரூபத்தில், ‘பொறையாம் அறிவில்’ நிலைபெறுகிறது. அதாவது, அகங்காரம்/மனம் தனது சலனத்தன்மையை (சித்-விலாசம்) விட்டு பூரணமான அறிவு’, 'வெறும் இருப்பு' ‘பொறையாம் அறிவு’ (சித்-சொரூபம்) என்ற தன் சுய-சொரூபத்தில் அமர்கிறது. எவ்வாறு அலை-எழுச்சி தணிந்து போகும்போது, ​​அது அமைதியான கடலில் -- தண்ணீரில் அமர்ந்துவிடுகிறதோ, அவ்வாறே இந்த “அஹம் பிரம்ம அஸ்மி” --- “நான் பிரம்மம்” தியானத்தால் ஜீவனின் அகங்கார-அலை அடங்கி, அதன் தனித்துவத்தை இழந்து நிறை-உணர்வில் (பிரம்மத்தில்) ஒடுங்கி விடுகிறது. அப்பொழுது, "நான் பிரம்மம்", "நான் பிரிக்கப்படாத நிறை-உணர்வு", ”நான் சித்-சொரூபம்” என்ற ஞானம் அல்லது அனுபூதி அடையப்படுகிறது. அது அவனுடைய அகங்காரத்திற்கு (தனித்தன்மை-உணர்வுக்கு) மட்டுமல்லாமல், அதன் காரணமாகிய அறியாமைக்கும் மரண-அடி கொடுத்து அழித்துவிடுகிறது. ஏனென்றால், அந்த அகண்டாகார வெளிச்சமான சோதிப் பிழம்பில், ஞான-ஒளியில் அறியாமையாகிய இருளுக்கு இடமில்லை. எனவே, "பொறையாம் அறிவால்” (“அஹம் பிரம்ம அஸ்மி" என்ற தியானம் மூலம்) "அரிவாய் அடியோடும் அகந்தையையே” {அகந்தையை அதன் வேருடன் சேர்த்து (அரிந்து) வெட்டிக் களைந்து விடுவாயாக} என்று அச்சாதகன் அறிவுறுத்தப்படுகிறான். ஒளி, இருளை ஒப்புக் கொள்ளாது; அதேபோல், ஞானம் அஞ்ஞானத்தை (அறியாமையை, மற்றும் அதன் காரியமான அகந்தையையும்) ஒப்புக் கொள்ளாது. ஒளியில் இருள் இருக்க முடியாது. அவ்வாறே, சைதன்யமயமான, ஜ்யோதி-சொரூபமான நிறை-உணர்வில் அறியாமை இருக்க முடியாது. “நான் பிரம்மம்” (அஹம் பிரம்ம அஸ்மி) என்ற தியானத்தின் மூலம் “பொறையாம் அறிவை” (சித்-சொரூபத்தை -- பரம்பொருளை) அடைந்து, அந்த அனுபூதியில் நிலை பெறுவது ஒன்றே அகந்தையையும் அதன் ஆணிவேரான (மூலகாரணமான) அறியாமையையும் சேர்த்து அழிப்பதற்கான ஒரே வழியாகும்.

    முன்னர் (செய்யுள்-28), அச்சாதகன் தன் தியானத்தில் அண்ட- உணர்வின் விளிம்பைத் தொட்டபோது (சற்றேகுறைய சமாதி நிலை), அவனது அகந்தை விழுங்கப்பட்டதே (தூக்கத்தில் நடைபெறுவதுபோல, தற்காலிகமாக செயலிழந்ததே) தவிர, அழியாமல் இருந்தது. அகந்தையின் ஆணிவேரான (மூல காரணமான) அறியாமை அழிக்கப்படாத காரணத்தால், தியானம் கலைந்தவுடன் அவன் இந்த மாய (பொய்மை) உலகிற்குத் திரும்ப வேண்டியதாயிற்று (‘அறியாமை பொறுத்திலையே’ – செய்யுள்: 29); அறியாமை அழியாதவரை, முக்தி பெறுவதென்பது இயலாத ஒன்று. எனவே, “அரிவாய் அடியோடும் அகந்தையை” என்ற அறிவுரை அவனுக்கு இங்கு தரப்படுகிறது.

    அச்சாதகன் சன்னியாசம் எடுத்துக் கொண்டதன் மூலம் தன் குறிக்கோளை அடைந்து விட்டான், இறை-அநுபூதி பெற்று விட்டான், இறைவனை-அடைந்து விட்டான் என்றெல்லாம் ஆகாது; சன்னியாசம் குறிக்கோளை அடைவதற்கு ஒரு கடைசி ஆயத்தம்தான். குருவிடமிருந்து பெற்ற சன்னியாச-தீக்ஷை மற்றும் தியானமுறை உபதேசங்களுடன் உண்மையான தியானத்தில் ஆழ்ந்து பரம்பொருளில் திளைப்பதற்கு வேண்டிய தகுதியை இப்போது முழுமையாகப் பெற்றிருக்கிறான். அவன் இனிமேல் ‘அஹம் பிரம்ம அஸ்மி’ என்ற ‘நிறை-உணர்வில்’ ஆழ்ந்து தியானம் செய்து, பிரம்மத்தில் தன்னை நிலை பெறச் செய்து கொள்ள வேண்டும், அதாவது சமாதிநிலை பெற்றிட வேண்டும். இவ்வாறு அவன் செய்ய வேண்டும் என்பது குரு அவனுக்கு தந்த அறிவுறுத்தலிலேயே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. --- ‘பொறையாம் அறிவால்’ (தன்னைப் பற்றிய உண்மை அறிவை அடைந்து) ‘அரிவாய் அடியோடும் அகந்தையையே’ (அகந்தையை அதன் வேரான அறியாமையுடன் சேர்த்து வெட்டிவிடுவாயாக) என்பதில் உணர்த்தப்பட்டுள்ளது.

    முன்னர், சாதனையின் துவக்க காலத்தில், குரு அச்சாதகனுக்குத் தந்த வாய்மொழி அறிவுறுத்தல், அவனிடம் “நான் உடலல்ல. நான் ஆத்மா” என்ற தத்துவார்த்தப் புரிதலை ஏற்படுத்தியது (மெய்பொருள் பேசியவா – செய்யுள்: 8); அந்த வாய்மொழி அறிவுறுத்தல் இப்பொழுது சன்னியாசம் கொடுத்து, ‘அஹம் பிரும்ம அஸ்மி’ என்ற மகாவாக்கியத்தின் மேல் தியானம் செய்யச் சொன்னதன்மூலம் இங்கு நடைமுறைப்படுத்தித் தருகிறார் () அதற்கு ஒரு ஸ்தூல வடிவம் தருகிறார்,

No comments:

Post a Comment